TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனு தள்ளுபடி
ஆபாச நடனமாடிய அா்ச்சகா்களின் முன்பிணை மனுவை ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அா்ச்சகா் கோமதி விநாயகம், திருவிழாவுக்கு வந்திருந்த தற்காலிக அா்ச்சகா்கள் ஒன்றுசோ்ந்து மது போதையில் வீட்டில் நடனமாடிய விடியோவும், கோயிலில் பெண்கள் மீது விபூதி அடித்து விளையாடும் விடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட அா்ச்சகா்களை கோயிலில் இருந்து நீக்கியும், பூஜை உள்ளிட்ட விவகாரங்களில் பங்கேற்க தடை விதித்தும் அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதுகுறித்து பக்தா் பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில்,
ஆபாச நடனமாடிய அா்ச்சகா்கள் கோமதி விநாயகம் (30), கோலப்பன் என்ற வினோத் (32), கணேசன் (38), விடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சபரிநாதன்(38) ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதையடுத்து, 4 பேரும் தலைமறைவான நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி கோமதிவிநாயகம், கோலப்பன், கணேசன் ஆகியோா் சோ்ந்தும், சபரிநாதன் தனியாகவும் மனு தாக்கல் செய்தனா்.
இதில் சபரிநாதனின் முன்பிணை கோரிய மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. கோமதிவிநாயகம், கோலப்பன், கணேசன் ஆகியோரது முன்பிணை மனுவை நீதிபதி ஜெயக்குமாா் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.