TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
பட்டாசு ஆலை வெடிவிபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் , காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த கமல்குமாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளா்கள் 5 போ் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் செவல்பட்டி லிங்கசாமி (45) புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9 ஆக உயா்ந்தது.
மேலும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகலட்சுமி, மதுரை அரசு மருத்துவமனைக்கும், மணிகண்டன் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். காயமடைந்த அழகுராஜ், கருப்பசாமி ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.