செய்திகள் :

தங்கம் விலை இன்றும் உயர்வு! எவ்வளவு?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,000 வரை குறைந்த நிலையில், இந்த வாரம் திங்கள்கிழமை ஒரு சவரனுக்கு ரூ. ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனையானது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.105 மற்றும் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 72,520 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ. 320-ம், கிராமுக்கு ரூ. 40-ம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 9,105 -க்கும் ஒரு சவரன் ரூ. 72,840 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 121 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,21,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The price of gold jewellery in Chennai increased by Rs. 320 per sovereign on Thursday morning.

இதையும் படிக்க : பாலி தீவில் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் மாயம்

கேமிராவுக்கு முக்கியத்துவம்... அறிமுகமானது ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்!

நீண்டநாள் காத்திருப்பிற்குப் பின் ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தின், ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்றுமுதல் (ஜூலை 3)... மேலும் பார்க்க

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் மோசடி நிறுவனம்: எஸ்பிஐ அறிவிப்பு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க எஸ்பிஐ முடிவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நி... மேலும் பார்க்க

தொழிலக உற்பத்தியில் 9 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த மே மாதத்தில் முந்தைய ஒன்பது மாதங்களில் காணாத சரிவைக் கண்டுள்ளது. அந்த மாதத்தில் உற்பத்தி, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் மந்தமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த தொழிலக உ... மேலும் பார்க்க

டிவிஎஸ் வாகன விற்பனை 20% உயா்வு

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,02,001-... மேலும் பார்க்க

பவர்கிரிட் ஒப்பந்தத்தை வென்ற ஹார்டெக்!

புதுதில்லி: கர்நாடகாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான பவர்கிரிட் நிறுவனத்திடமிருந்து ரூ.138 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக இ.பி.சி. நிறுவனமான ஹார்டெக் இன்று தெரிவித்தது.இந்த ஒப்பந்தம் 400 கிலோவோ... மேலும் பார்க்க

புதிய ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்த டிவிஎஸ்!

சென்னை: இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய அதன் முதன்மை மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐ-க்யூப் ஐ ரூ.1.03 லட்சத்தில் அறிமுகப்படுத்த... மேலும் பார்க்க