திருப்புவனம் அஜித்குமாருக்கு கஞ்சா அளித்து கொடூரத் தாக்குதல்! மூளையில் ரத்தக் கச...
உணவுக்காக திரண்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 94 பேர் கொலை!
காஸாவில் நள்ளிரவு முதல் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், உணவுக்காக காத்திருந்த 45 பேர் உள்பட 94 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காஸா பகுதியில் இன்று (ஜூலை 3) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ரகசிய மனிதாபிமான அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கொல்லப்பட்டனர்.
இத்துடன், நிவாரணப் பொருள்கள் வாங்குவதற்காக காத்திருந்த பால்ஸ்தீனர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த, முவாஸி மண்டலத்திலுள்ள முகாம்களின் மீது நேற்று (ஜூலை 2) நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 49 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் இன்று (ஜூலை 3) காலை வரை தொடர்ந்த நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 2023-ம் ஆண்டு முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Israel attacks Palestinians waiting for food! 94 killed!
இதையும் படிக்க: ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்டுமா?