செய்திகள் :

"திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" - கோவிஷீல்டு நிறுவனம்

post image

கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், உயிரிழந்தவர்களில் பாதிபேர் 20 முதல் 40 வயதுடையவர்கள்.

கொரோனா காலத்தில் போட்டுக்கொண்ட தடுப்பூசி தான் மாரடைப்பு ஏற்பட்டு இவர்கள் உயிரிழக்க காரணம் என்று பரவிய பேச்சு இந்த விவாதத்தை பெரும் விவாதமாக்கியது.

சித்தராமையா
சித்தராமையா

அதோடு மாநில முதலமைச்சர் சித்தராமையா, "கொரோனா காலத்தில் தடுப்பூசிகளை அவர அவசரமாக அங்கீகரித்து, அவற்றைப் பொதுமக்களுக்கு விநியோகித்தது இந்த இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என்பதை யாரும் மறுக்க முடியாது" என ஒரே நேரத்தில் மத்திய அரசையும், தடுப்பூசி நிறுவனங்களையும் விமர்சித்தார்.

முதலமைச்சரின் இத்தகைய கருத்து இந்த விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியது. கூடவே, இதில் ஒரு மருத்துவர் குழுவையும் அமைத்து இறப்புக்கான காரணங்கள் கண்டறிந்து 10 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் சித்தராமையா உத்தரவிட்டார்.

இருப்பினும் மத்திய அரசு, சித்தராமையாவின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தது.

அந்த வரிசையில், இந்த திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு எதுவும் இல்லை என கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இன்று கூறியிருக்கிறது.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையைப் பகிர்ந்திருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், "சுகாதார அமைச்சகத்தால் மேற்கோள் காட்டப்பட்டபடி, ICMR மற்றும் AIIMS-ன் இரண்டு பெரிய அளவிலான ஆய்வுகள், கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும் இந்தத் திடீர் இறப்புகளுக்கும் இடையே எந்த தொடர்பையும் கண்டறியவில்லை.

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் அறிவியல் பூர்வமாக சரிபார்க்கப்பட்டவை" என்று பதிவிட்டிருக்கிறது.

Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?

''புத்தம்புதிய, பசுமையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் முளைவிட்ட பயறுகளை ‘உயிர் உள்ள உணவுகள்’ (live foods) என்று கூறுகிறோம். ஏனெனில், அவை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. மனிதனின் ஆ... மேலும் பார்க்க

Doctor Vikatan: எவ்வளவு நேரம் நீரில் குளிக்கலாம்.. எது சரியான முறை?

Doctor Vikatan: குளிப்பதில் எது சரியான முறை? சிலர் காக்கா குளியல் குளித்துவிட்டு வருவதைப்பார்க்கிறோம். இன்னும் சிலர் மணிக்கணக்காக ஊறி, தேய்த்துக் குளிப்பதைப் பார்க்கிறோம்.நீண்டநேரம்தண்ணீரில் ஊறிக்குளி... மேலும் பார்க்க

Immune Drinks: நோய் எதிர்ப்பு சக்தி தரும் சாறுகள்!

கொரிமேட்டோ ஜூஸ்கொரிமேட்டோ ஜூஸ்தேவையானவை: கொத்தமல்லி இலை - 1 கப், தக்காளி - 4, புதினா - 1 கைப்பிடி, எலுமிச்சைப்பழச் சாறு - 2 டீஸ்பூன், சீரகத்தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், பனங்கற்கண்டு அல்லது தேன் - த... மேலும் பார்க்க

Plastic: `இதயத்தைப் பாதிக்கும் ஷாம்பூ பாட்டில்'- அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு; விரிவான தகவல்கள்!

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சந்தேகத்துக்கு உட்படுத்துகிறது இந்த ஆய்வு.நம் இதயத்தை பலவீனமடைய... மேலும் பார்க்க

உலக யோக தினம்: புதுச்சேரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி | Photo Album

உலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிஉலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிஉலக யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் ந... மேலும் பார்க்க

மணிக்கணக்கில் இயர்போன் பயன்படுத்திய பெண்; காது கேளாமையால் பாதிக்கப்பட்டது எப்படி?

வயர்லெஸ் இயர்போன்களை பலரும் இன்று பயன்படுத்தி வருகின்றனர். பயணத்தின் போதும், ஓய்வு நேரங்களிலும் அல்லது சத்தம் வெளியே வரக்கூடாது என்பதற்காகவும் இயர்போன்களை தினமும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இயர்ப... மேலும் பார்க்க