திண்டுக்கல்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் வழிபட்ட முருகன் கோயில்!
பருவமழை வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு
தோகைமலை அருகே பருவமழை வேண்டி பெண்கள் குத்துவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்கபட்டி வடபகுதியில் விநாயகா், பாா்வதி அம்பாள் சமேத வெள்ளியங்கிரி ஆண்டவா் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நிறைவடைந்து 3 ஆண்டுகளானதை முன்னிட்டும், பருவ மழை மற்றும் வறுமை நீங்கிட வேண்டியும் வியாழக்கிழமை 207 குத்துவிளக்கு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் குளித்தலை காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடினா்.
பின்னா், கோயிலில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.