செய்திகள் :

ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

post image

ஜப்பானில் சுனாமி வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

புதிய பாபா வங்கா என்றழைக்கப்படும் ரியோ தட்சுகி என்பவர் 1999 ஆம் ஆண்டில் கணித்த சில கணிப்புகள் நிஜமாகவே நிகழ்ந்த நிலையில், அவரை தீர்க்கதரிசியாகவே பலரும் கருதினர். அவரது கணிப்புகளாக வேல்ஸ் இளவரசி டயானாவின் இறப்பு, 2011-ல் ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி, கரோனா தொற்று முதலியவற்றை அவர் கூறியிருந்தார். அவைகளும் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்து விட்டன. அதிலிருந்து அவரை சிலர் வழிபட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் 2025, ஜூலை 5 ஆம் தேதியில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்படப் போவதாக முன்னரே கணித்திருந்ததால், அந்நாட்டில் பலரும் பதற்றமடைந்துள்ளனர். இருப்பினும், 2025 தொடங்கியதில் இருந்து கணிப்புகளை நிறுத்தி விட்டதாகவும், அவருக்கு காட்சிகள் (தீர்க்கதரிசனம்) எதுவும் தோன்றவில்லை என்றும் கூறினார்.

ஜப்பான் - பிலிப்பைன்ஸ் இடையே கடலுக்கடியில் விரிசல் ஏற்பட்டு, 2011-ல் ஏற்பட்ட சுனாமியைவிட 3 மடங்கு சுனாமியால் உயரமான அலைகள் எழும் என்று அவர் கூறியிருந்ததால், மில்லியன் கணக்கானோர் ஆபத்தில் இருப்பதாக பொதுமக்கள் சிலர் பதற்றமடைந்துள்ளனர்.

தட்சுகியின் கணிப்புகள் தொடர்பான விடியோக்கள், சித்திரிப்பு காட்சிகளும் சமூக ஊடகங்களை ஆட்கொண்டு, நாளை உலகம் அழிந்து விடுவதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனிடையே, புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஷின்மோ மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், பலரும் பதற்றத்தின் உச்சத்துக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பதற்றத்துக்கிடையே, ஜப்பானில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்பட கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பலரும், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். சுனாமி வதந்திகளால் ஜப்பான் சுற்றுலாத் துறையில் 3.9 பில்லியன் டாலர் (ரூ. 33.2 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பரவும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அந்நாட்டு நில அதிர்வு நிபுணர்கள், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படுவதற்கான எந்த தரவும் இல்லை என்று கூறுகின்றனர். ஜூலை 5 ஆம் தேதிக்கு, எந்த அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் விடுக்கவில்லை.

இதனிடையே, பொதுமக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும், நிபுணர்களின் அறிவுறுத்தலைக் கேட்குமாறும் தட்சுகி கூறியுள்ளார்.

Japanese Baba Vanga Predicts Tsunami

டிரம்ப்பின் சம்பளம் எவ்வளவு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஊதிய விவரம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஊதிய விவரக் குறிப்பில், அதிபர் வருமானமாக டிரம்ப்புக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் (சு... மேலும் பார்க்க

உலகின் முதல் நாடாக தலிபான் அரசை அங்கீகரிக்கும் ரஷியா!

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்யும் தலிபான்களின் அரசை, ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த அரசுக்கு எதிராக, நடைபெற்ற உள்நாட்டுப் போரின்... மேலும் பார்க்க

அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியதால், உலகளவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.அமெரிக்காவின் செலவுகளைக் குறைப்பதற்காக, சர்வதேச மேம்பாட்டு... மேலும் பார்க்க

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீன... மேலும் பார்க்க

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க