செய்திகள் :

அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

post image

சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியதால், உலகளவில் கோடிக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் செலவுகளைக் குறைப்பதற்காக, சர்வதேச மேம்பாட்டுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி (USAID) நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக, நிதியுதவி இழப்பால் உலகம் முழுவதும் பலவீனமான மக்கள் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாய், சேய் சுகாதாரப் பாதுகாப்பு, காசநோய் தடுப்பு, மலேரியா கட்டுப்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற பல முக்கிய திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் நிதி நிறுத்தத்தால், 2030 ஆம் ஆண்டுக்குள்ளாக, உலகளவில் 1.4 கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என்றும், அவற்றில் 45 லட்சம் பேர் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளாகவே இருப்பர் என்று தி லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது. இது உலகளாவிய குழந்தை இறப்பு விகிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2001 முதல் 2021 வரையிலான 20 ஆண்டுகளில், அமெரிக்காவின் நிதியுதவியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 133 நாடுகளில் 3 கோடி குழந்தைகள் உள்பட 9.1 கோடிக்கும் அதிகமானோரின் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

எச்.ஐ.வி, மலேரியா, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் நிதியுதவி முக்கிய பங்காற்றின.

இந்த நிலையில், நிதி நிறுத்தப்படுவதால் மேற்கூறிய நோய்ப் பாதிப்புகள் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வறுமையின் காரணமாக பசி பட்டினியில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டங்களும் பாதிக்கப்படுவதால், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, பாதிப்படையும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இதையும் படிக்க:ஜப்பானில் நாளை சுனாமி வருகிறதா? கரோனா தொற்றை கூறிய பாபா வங்கா கணிப்பு!

14 million lives at risk

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுத... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?

ஃபாக்ஸ்கான் நிறுவனமானது, 300 சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை, அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐஃபோன் அசெம்பிள் நிறுவனமா... மேலும் பார்க்க

20 நாள்களுக்குப் பின்... ஈரானின் பன்னாட்டு விமான சேவை துவக்கம்!

ஈரான் நாட்டில் 20 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பன்னாட்டு விமான சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. ஈரானின் ராணுவ தளவாடங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ எனும் பெயரில் கடந்த... மேலும் பார்க்க

டிரம்ப்பின் சம்பளம் எவ்வளவு?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஊதிய விவரம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஊதிய விவரக் குறிப்பில், அதிபர் வருமானமாக டிரம்ப்புக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர் (சு... மேலும் பார்க்க