உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை கூகுள் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதாக 2019 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் இலக்கு விளம்பரத்துக்காக, பயனர்களின் தரவுகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கலிஃபோர்னியா சட்டத்தின்கீழ், பயனர்களின் தரவு என்பது அவர்களின் தனிப்பட்ட சொத்து.
வாடிக்கையாளர்களின் தொலைபேசிகள் செயலற்று இருக்கும்போது பயன்படுத்தப்படும் தரவுகளுக்கு கூகுள் நிறுவனம்தான் பொறுப்பு என்று வாதிடப்பட்டது. இது கூகுளின் தவறான நடத்தையை தீவிரமாக வெளிக்கொணர்கிறது என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 1.4 ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு 314.6 மில்லியன் டாலர் இழப்பீடு ( ரூ. 2,686 கோடியில் தலா சுமார் ரூ. 1,900) வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்த கூகுள் நிறுவனம், மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறியது. தொடர்ந்து, தரவு பரிமாற்றங்களால் எந்த ஆண்ட்ராய்டு பயனர்களும் பாதிக்கப்படவில்லை என்றும், நிறுவனத்தின் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளில் பயனர்கள் ஒப்புதல் அளித்ததாகவும் கூகுள் தெரிவித்தது.