செய்திகள் :

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

post image

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி, 20,000 க்கும் மேற்பட்ட பாபா பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பாபாவின் பக்தர்கள் நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் இங்கு வருகிறார்கள்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் அவர்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.

ஜம்மு-காஷ்மீர் அரசும் ஸ்ரீஅமர்நாத் ஆலய வாரியமும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தியுள்ளன. எதிர்கால தேதிகளுக்கு பதிவு செய்துள்ள சில பக்தர்கள், திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டனர்.

பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாரும் வெளியேறும்படி கேட்கப்பட மாட்டார்கள்.

ஆனால் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிக்கு பதிவு செய்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான தங்குமிடத்தை வழங்குவது எங்கள் முன்னுரிமை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, ஜம்மு முகாமிலிருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கும் ஏற்கெனவே 5,892 பேர் அடங்கிய முதல் குழு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. இக்குழுவினரின் பயணத்தை துணைநிலை ஆளுநரும், ஸ்ரீஅமா்நாத் கோயில் வாரியத் தலைவருமான மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க... செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

Over 20,000 pilgrims have had darshan of the naturally formed ice 'Shivling' in the holy cave shrine of Amarnath in the south Kashmir Himalayas during the first two days of the pilgrimage, Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha said on Friday.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க