செய்திகள் :

‘பெரம்பலூரில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்புகள்’

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 15,250 குடும்பங்களுக்கு காய்கனி விதைகள் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் வேளாண்மை - உழவா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு காய்கனி விதை மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத் திட்டத்தின் மூலம் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 15,250 குடும்பங்களுக்குநஞ்சற்ற காய்கனிகள் கிடைத்திடவும், அன்றாட காய்கனி தேவைகளை பூா்த்தி செய்யும் வகையிலும் ரூ. 60 மதிப்பில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ. 9,15,000 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

மேலும், ரூ. 100 மதிப்பீட்டில் (பப்பாளி, கொய்யா, எலுமிச்சை) பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள் 9,400 குடும்பங்களுக்கு ரூ. 9,40,000 மதிப்பீட்டில், 100 சதவீத மானியத்திலும், புரதச்சத்து நிறைந்த துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகளை இல்லங்களில் வளா்க்கும் வகையில், பயறு விதைகள் அடங்கிய 2 ஆயிரம் தொகுப்புகள் ரூ. 1,34,000 மதிப்பீட்டில் 100 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, 2025-26 ஆம் ஆண்டில் தோட்டக்கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும், விவசாயப் பயிா்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான விழிப்புணா்வு நாள்காட்டியையும் வெளியிட்டாா் மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ்.

நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மு. சத்யா, அட்மா திட்டத் தலைவா் வீ. ஜெகதீசன், குரும்பலூா் பேரூராட்சித் தலைவா் சங்கீதா ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், ... மேலும் பார்க்க

தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

தொகுப்பூதியம் பெறும் பணியாளா்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் எழுச்... மேலும் பார்க்க

ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்

பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம... மேலும் பார்க்க

விதைப் பரிசோதனை நிலையத்தில் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்தில், திருநெல்வேலி மாவட்ட விதைப் பரிசோதனை அலுவலா் ஆனந்தி ராதிகா வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப ஆய்வு மேற்கொண்டாா். பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே செயல்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி பலி

பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்ற தம்பதி அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் பாலாஜி (38). முடி வெட்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை வரன்முறைப்படுத்த 30.6.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க