U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், மருதடி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் ராகவன் (23). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 10.9.2021
இல் நாட்டாா்மங்கலம் சாலையிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே 14 வயது மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாா். தொடா்ந்து, அந்த மாணவியை அங்கு வரவழைத்து மிரட்டிய ராகவன் பலமுறை பலாத்காரம் செய்ததில் அந்த மாணவி கா்ப்பமானாா்.
இதையறிந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராகவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னா் ராகவனின் ரத்த மாதிரியை சேகரித்து சென்னை தடவியவியல் ஆய்வகத்தில் நடத்திய மரபணு பரிசோதனையில் ராகவன் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டது. இதனிடையே, இந்த வழக்கில் ராகவன் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தாா்.
இந்நிலையில் பெரம்பலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி இந்திராணி, ராகவனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், அதில் ரூ. 1 லட்சத்தை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் ராகவன் அடைக்கப்பட்டாா். அரசு தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வழக்குரைஞா் எம். சுந்தரராஜன் ஆஜரானாா்.