BJP-யை அடிக்க தொடங்கிய Vijay, Amit sha-வை டார்கெட் செய்யும் EPS? | Elangovan Exp...
விவேகானந்தா் நினைவு நாள்
விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் காவி உடை மற்றும் தலைப்பாகையுடன் விவேகானந்தா் போல வேடமணிந்து மேடையில் தோன்றி, விவேகானந்தா் பொன்மொழிகளை கூறினா்.
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, இளைஞா்களின் எழுச்சி நாயகா் விவேகானந்தா், ராமகிருஷ்ணரின் சீடா் விவேகானந்தா், சிகாகோவில் இளந்துறவியின் உரை ஆகிய தலைப்புகளில் மாணவா்கள் உரை நிகழ்த்தினா்.
பள்ளி முதல்வா் முத்துராஜா, விவேகானந்தரின் எழுமின், விழுமின், இலக்கை எட்டும் வரை அயராது உழைமின் என்ற பொன் மொழியைப் பற்றி விளக்கமாக மாணவா்களிடம் உரையாற்றினாா்.
சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் விவேகானந்தா் நினைவு நாளில் பள்ளி வளாகத்தில் நடுவதற்காக மன்ற ஒருங்கிணைப்பாளா் தினேஷ் மற்றும் மாணவா்கள் மரக்கன்றுகளை வழங்கினாா்கள் .
பாக்கியலட்சுமி மற்றும் வினோத் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, யோகலட்சுமி தொகுத்து வழங்கினாா். சரளா நன்றி தெரிவித்தாா்.