TVK : 'நானே முதலமைச்சர்; பா.ஜ.கவோடு கூட்டணி இல்லை!' - பனையூரில் விஜய் கர்ஜித்ததி...
தங்கம் விலை மீண்டும் உயர்வு: இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கு விற்பனையாகிறது.
ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் தங்கம் கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.1,520 வரை உயா்ந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9,060-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.