செய்திகள் :

``அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல'' - முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இபிஎஸ்

post image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கால இடைவெளிகூட இல்லாததால், ஆளுங்கட்சியான தி.மு.க-வும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வும் தேர்தல் வேலையை மும்முரமாகத் தொடங்கிவிட்டன.

இப்போதைக்கு தி.மு.க கூட்டணி அப்படியேதான் இருக்கிறது. மறுபக்கம், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மட்டும் உறுதியாகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் அ.தி.மு.க-வுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு செல்லும் என்று பேச்சு அடிபட்ட வேளையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மீண்டும் உருவானதால் இனி விஜய், பா.ஜ.க அங்கம் வகிக்கும் அ.தி.மு.க கூட்டணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது.

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் லோகோ
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தின் லோகோ

இதற்குப் பதிலளிக்கும் வகையில், "சுயநலத்துக்காக பா.ஜ.கவுடன் கூட்டணி செல்ல தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ இல்லை நாம்." என த.வெ.க செயற்குழு கூட்டத்தில் நேற்று வெளிப்படையாகப் போட்டுடைத்த விஜய், "த.வெ.க தலைமையில் கூட்டணி அமையும்" என்றும் கூறினார்.

மேலும், இக்கூட்டத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார், ஒருவேளை இக்கூட்டணி வெற்றிபெற்றால் அது அ.தி.மு.க ஆட்சியாக இருக்குமா அல்லது பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியாக இருக்குமா என்ற கேள்விகளும் அ.தி.மு.க-வை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறான அரசியல் பரபரப்புக்கு மத்தியில், தேர்தலை எதிர்நோக்கி ஜூலை 7-ம் தேதி முதற்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயண பாடலையும், லோகோவையும் சென்னையில் இன்று வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "சென்னைக்கு அமித் ஷா வந்தபோது, `அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமையேற்கும், அ.தி.மு.க ஆட்சியமைக்கும், முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ்' என்று தெளிவாகத் தெரிவித்தார்.

இதில், அமித் ஷா கூறிய பிறகு வேறு யார் பேசினாலும் அது சரியல்ல." என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும், விஜய்யின் நேற்றைய அறிவிப்பு குறித்த கேள்விக்கு, "அது அவருடைய முடிவு" எனப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் தேர்தலில் கூட்டணியமைத்து போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். தி.மு.க அகற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்." என்றார்.

``பாஜகவோடு கூட்டணி கிடையாது என்று விஜய் சொன்னதை வரவேற்கிறேன்'' - செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்... மேலும் பார்க்க

``அரசுப் பணிகளில் திமுக ஐ.டி விங் நபர்களைச் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி'' - இபிஎஸ் கண்டனம்

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தி.மு.க ஐ.டி விங் சேர்ந்தவர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு கண்டனம்... மேலும் பார்க்க

Bihar: ``மகளிருக்கு இலவசமாக வழங்கிய சானிட்டரி பேடில் ராகுல் காந்தி படம்'' -காங்கிரஸை விமர்சித்த பாஜக

பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்ச... மேலும் பார்க்க

Taliban: தாலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா! - காரணம் தெரியுமா?

ஆஃப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போதிலிருந்து இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், தாலிபான் அரசு பல நாடுகளுடன் உயர்மட்டப் பே... மேலும் பார்க்க

Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!

கணையம், நம் உடலில் உள்ள பெரிய சுரப்பி இதுதான். சுமார் 6-10 இன்ச் அளவில் இருக்கும். முக்கிய ஹார்மோன்களையும் என்ஸைம்களையும் சுரக்கச் செய்து, செரிமானத்துக்கு உதவுகிறது. மீன் போன்ற வடிவில், பஞ்சு போல மென்... மேலும் பார்க்க

TVK: ``பொதுமன்னிப்புக் கேட்டு பதவி விலகுங்கள் முதல்வரே!'' - ஆதவ் அர்ஜூனா காட்டம்!

'செயற்குழுக் கூட்டம்!"தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடந்து முடிந்திருக்கிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்ச... மேலும் பார்க்க