செய்திகள் :

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

post image

மும்பையில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், இந்தித் திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து, இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான். நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரத்தில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில், இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற பாஜக அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை பாஜக அரசு மாற்றிக் கொள்ளுமா?

தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!

இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப்போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள சிலர், இனியாவது திருந்த வேண்டும்.

மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்! தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் முழு கொள்ள‌ளவை எட்டியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் நடபாண்டில் இரண்டாவது முறையாக 120 அடி எட்டியது.மேட்டூர் அணை வரலாற்றில் 44வது முறையாக அதன் முழு கொள்ளளவு 120 அடியை கடந்த 29 ஆம் ... மேலும் பார்க்க

சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் சிவசங்கர்

ஏழை - எளிய மக்கள், சிறு, குறு தொழில்கள் பாதிக்காத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.கோவை கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை- தொல். திருமாவளவன்

பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், பாமக இரண்டா... மேலும் பார்க்க

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தே... மேலும் பார்க்க

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருக்கிறோம்! - ஜி.கே. மணி

பாமகவில் அனைவரும் மன வேதனையில் இருப்பதாக கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. அன்புமணி, திலகபா... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று(ஜூலை 5) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுத... மேலும் பார்க்க