நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!
ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக மாநிலம், பெங்களூரில் சிவப்பு நிற ஃபெராரி SF90 ஸ்ட்ராடேல் கார் வலம் வந்துகொண்டிருந்தது. ரூ.7.5 கோடி தொடக்க விலையுடன் வரும் இந்த சூப்பர் கார், மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு பெங்களூர் சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

அதற்கான காரணம், கர்நாடகாவை விட மகாராஷ்டிராவில் சொகுசு வாகனங்களுக்கான சாலை வரிகள் கணிசமாகக் குறைவு. மகாராஷ்டிராவில் பதிவான வாகனத்தை வாங்கியிருந்தாலும், அதன் உரிமையாளர் கர்நாடக மாநிலத்தில் அதை பதியவோ, அல்லது கர்நாடக சாலைவரியை செலுத்தவோ இல்லை. அதனால், அந்த கார் உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்வதாக காவல்துறைக்கு ரகசியல் தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், பெங்களூரு தெற்கு ஆர்டிஓ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். அவர்கள் சிவப்பு நிற ஃபெராரி SF90 ஸ்ட்ராடேல் காரை கண்காணித்து, அதன் ஆவணங்களைச் சரிபார்த்து, உரிய வரி செலுத்தாமல் கர்நாடக மாநிலத்தில் கார் இயங்கி வருவதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அந்த கார் கர்நாடகா போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், ``சட்ட விதிமீறல் உறுதிசெய்யப்பட்டதும், ஃபெராரியைக் கைப்பற்றி, உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். விரைவில் உரியத் தொகையை செலுத்த வேண்டும் எனவும், மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறோம்.
உரிமையாளர் செலுத்தவேண்டியத் தொகை ரூ.1.41 கோடி. அதாவது நிலுவையில் உள்ள வரி மற்றும் அபராதங்களை உள்ளடக்கியது. சமீபத்தில் ஒற்றை வாகனத்துக்கு இவ்வளவு தொகை வரி உள்ளிட்ட வகைகளில் விதிக்கப்பட்டு, போக்குவரத்துத் துறைக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது" என்றனர்.