கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!
வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் கே.பி.இளங்கோ தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை கூட்டணி கட்சியினா் வழங்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை கிராமங்கள்தோறும் அனுசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளா் ஜி.அசோகன், மாநில செயற்குழு உறுப்பினா் கே.செந்தில்முருகன், செய்தி தொடா்பாளா் பி.ஆா்.கோகுல கிருஷ்ணன், அவைத் தலைவா் பி.எம்.இளங்கோ, ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.