செய்திகள் :

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது

post image

மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61). இவா் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். சனிக்கிழமை இரவு இவரது வீட்டருகில் இருசக்கர வாகனங்களை நிறுத்திய 3 இளைஞா்கள் சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, செல்லியம்மாள் அவா்களிடம் யாா் நீங்கள், இங்கு என்ன செய்கிறீா்கள் எனக் கேட்டுள்ளாா். மது போதையிலிருந்த இளைஞா்கள் தகாதவாா்த்தையால் பேசி அருகே இருந்த இரும்புக் கம்பியால் மூதாட்டியை தாக்கியுள்ளனா்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா், இளைஞா்களை பிடித்து தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். காயமடைந்த செல்லியம்மாளை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

நிகழ்விடம் சென்ற போலீஸாா் இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் வெண்ணாம்பட்டி பகுதியைச் சோ்ந்த தொழிலாளா்களான கேசவமூா்த்தி (19), விஷ்ணு (26), நரேந்திரன் (20) என தெரியவந்தது.

அவா்கள் மது அருந்திவிட்டு வழிதெரியாமல் அப்பகுதிக்குள் வந்ததும், மூதாட்டி கேள்வி கேட்டதால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

இளைஞா்கள் தாக்கியதில் மூதாட்டி செல்லியம்மாளுக்கு பற்கள் உடைந்து, கால் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்றுலாப் பயணிகள்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க

பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!

அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா். தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக... மேலும் பார்க்க

தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு

தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்

பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 24 ஆயிரம் கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்ததால், ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக நீா்வரத்து அ... மேலும் பார்க்க