செய்திகள் :

Lucky Baskar 2: "பயோபிக் எடுக்கச் சொன்னார்கள், ஆனால்; 'லக்கி பாஸ்கர் 2' வரும்!" - வெங்கி அத்லூரி

post image

இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது.

அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குநராக வெங்கி அத்லூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

Venky Atluri - Suriya 46 Director
Venky Atluri - Suriya 46 Director

அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு பலரும் காத்திருந்த சமயத்தில், சூர்யாவின் 46-வது படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது 'லக்கி பாஸ்கர்' படத்தின் சீக்குவல் தொடர்பாகவும், சூர்யா 46 தொடர்பாகவும் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் வெங்கி அத்லூரி.

அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், "என்னுடைய முதல் மூன்று படங்களை முடித்தப் பிறகு, ஒரே ஜானரில் படங்கள் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன்.

எமோஷனல் மெசேஜ் கலந்த படங்களைச் செய்ய வேண்டாம் என முடிவு செய்து, 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கினேன். ஆனால், அப்படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பயோபிக் படங்களை இயக்குவதற்கு வாய்ப்புகள் வந்தன.

Suriya 46
Suriya 46

'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு பீரியட் படம், த்ரில்லர் படம், பயோபிக் படம் ஆகியவற்றை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். நான் மகிழ்ச்சி நிறைந்த குடும்பப் படங்களையே கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.

அந்தப் படங்களைப் பார்க்கும் மக்கள் சிரித்து, மகிழ்ந்து, அழ வேண்டும் என்று யோசித்தேன். அப்படியான திரைப்படம்தான் 'சூர்யா 46'. கண்டிப்பாக 'லக்கி பாஸ்கர்' படத்தின் சீக்குவல் வரும்." எனக் கூறியிருக்கிறார்.

Phoenix: "அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி!" - கோவையில் சூர்யா சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ்'. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். சூர்யா சேதுபத... மேலும் பார்க்க

Paranthu Po: "ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்..." - 'பறந்து போ' குறித்து இயக்குநர் அட்லி

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப... மேலும் பார்க்க

Freedom: "அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு?" - பட விழாவில் சசிக்குமார்

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் நடித்திருக்கும் 'ஃப்ரீடம்' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சசிக்குமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கி... மேலும் பார்க்க

Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.." - தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!

அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'டைட்டானிக்'. ஜானகிராமன், இயக்குநர் சுதா கொங்கராவுடன் 'இறுதிச் சுற்று' படத்தில் உ... மேலும் பார்க்க

Jason Sanjay: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஜேசன் சஞ்சய்! - முழு விவரம் என்ன?

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.... மேலும் பார்க்க