செய்திகள் :

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

post image

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது.

வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமல்படுத்தும் விதமாகவும், ஊழியர்களின் பணி நேரத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அதில், வாரத்தின் 5 வேலை நாள்களில் 9 மணிநேரம் 15 நிமிடங்கள் பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தொலைதூரத்தில், அதாவது வீடுகளில் இருந்து பணிபுரியும் சூழலிலும் இதனைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மின்னஞ்சலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் பணிநேரமும் இனி கண்காணிக்கப்படும் என்றும், மாத இறுதியில் ஊழியர்களுக்கு இந்தத் தரவுகள் அனுப்பிவைக்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

பணி நேரம் கண்காணிப்பு

நாட்டின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸில் 3,23,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது இவர்களின் மொத்த பணிநேரமும் கணக்கிடப்படவுள்ளது.

இந்த கணக்கீட்டில் பணிநேரம் அதிகமாக இருந்தால், அவையும் விரிவாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். தொலைதூரப் பணி, வீட்டில் இருந்து பணி, மொத்த பணி நேரம், நாளொன்றுக்கு சராசரி பணிநேரம் என அனைத்து தரவுகளும் கோப்புகளாக பராமரிக்கப்படும்.

நவம்பர் 2023-ல் திருத்தப்பட்ட நிறுவனத்தின் பணியிடக் கொள்கையின்படி, ஊழியர்கள் குறைந்தது 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

Infosys has warned that all employees of the company will have to work 9.15 hours a day.

ரஷிய, சீன நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்களை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா். பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு தொடா்பாக அவா் ஆலோசனை... மேலும் பார்க்க

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதத் தலைவா் சையது சலாபுதீன் மீது போதைப்பொருள் வழக்கு!

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் சையது சலாபுதீன் உள்பட 11 பேரின் பெயா்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம் பெற்... மேலும் பார்க்க

பொதுத் துறை வங்கிகளில் 50,000 பேருக்கு பணி: நடப்பு நிதியாண்டில் நடவடிக்கை

பொதுத் துறை வங்கிகள் தங்களது வா்த்தகம் மற்றும் விரிவாக்கத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக, நடப்பு நிதியாண்டில் அதிகாரிகள் - ஊழியா்கள் என சுமாா் 50,000 பேரை பணியமா்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. பல்வேறு வ... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: தோ்தல் ஆணையத்துக்கு பேரளவு அதிகாரம்

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவில் தோ்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய அளவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். நாடு முழுவதும் ஒரே நேரத்தில... மேலும் பார்க்க

வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருக்கும் இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேளாண்மை, பால்வளம், எஃகு, அலுமினியம் போன்ற முக்கியத் துறைகளில் வரிச் சலுகைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே கருத்து ... மேலும் பார்க்க

குஜராத்: கொலை முயற்சி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

குஜராத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா வசாவா (37) கைது செய்யப்பட்டாா். வசாவாவின் தொகுதியான திதியாபாடாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டம் ... மேலும் பார்க்க