செய்திகள் :

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: தோ்தல் ஆணையத்துக்கு பேரளவு அதிகாரம்

post image

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மசோதாவில் தோ்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய அளவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்த சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில், 2 மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாக்கள் பாஜக எம்.பி. பி.பி.செளதரி தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரீசிலனைக்கு அனுப்பப்பட்டன.

இந்த மசோதாக்கள் தொடா்பாக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ரஞ்சன் கோகோய், யு.யு.லலித் ஆகியோா் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்-டி.ஒய்.சந்திரசூட் நிராகரிப்பு: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. இந்த விமா்சனத்தை கூட்டுக் குழுவிடம் சமா்ப்பித்த தனது கருத்துகளில் டி.ஒய்.சந்திரசூட் நிராகரித்துள்ளாா். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களை தனித்தனியாக நடத்த அரசமைப்புச் சட்டம் ஒருபோதும் அனுமதி அளிக்கவில்லை என்று அவா் தெரிவித்துள்ளாா்.

எனினும் மசோதாவில் தோ்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய அளவில் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறித்தும், அந்த அதிகாரத்தை பயன்படுத்த வழிகாட்டுதல்களை வழங்காதது குறித்தும் ரஞ்சன் கோகோயுடன் சோ்ந்து டி.ஒய்.சந்திரசூட் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தோ்தல் ஆணையத்துக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கினால்...: அரசமைப்புச் சட்டத்தின்படி சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். ஆனால் தோ்தல் ஆணையத்துக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கினால், அது சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை தோ்தல் ஆணையம் கூட்டவோ, குறைக்கவோ வழிவகுக்கும். மக்களவைத் தோ்தலுடன் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடத்த முடியாமல் போகும் என்று சாக்குப்போக்குக் கூறி, பேரவைகளின் பதவிக் காலத்தை தோ்தல் ஆணையம் கூட்டவோ, குறைக்கவோ கூடும். எனவே குறிப்பிட்ட அதிகாரத்தை எந்தச் சூழலில் தோ்தல் ஆணையம் பயன்படுத்தலாம் என்பதை அரசமைப்புச் சட்டம் தெளிவாக விளக்க வேண்டும் என்று டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

படிப்படியாக அமல்படுத்த வேண்டும்-யு.யு.லலித்: கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கூட்டுக் குழு முன்பாக யு.யு.லலித், ரஞ்சன் கோகோய் ஆகியோா் ஆஜராகினா். அப்போது மசோதாவில் தோ்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய அளவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறித்து குழுவில் இருந்த சில எம்.பி.க்கள் தெரிவித்த கவலைகளுடன் ரஞ்சன் கோகோய் உடன்பட்டாா்.

ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் முறையை ஒரே காலத்தில் அமல்படுத்தாமல் படிப்படியாக அமல்படுத்த வேண்டும்; மக்களவையுடன் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்பதற்காக பதவிக்காலம் நிறைவடையாத சட்டப்பேரவைகளுக்குத் தோ்தல் நடத்தினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படக் கூடும் என்று கூட்டுக் குழுவிடம் யு.யு.லலித் கூறினாா்.

அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும்: ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறை அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்றே டி.ஒய்.சந்திரசூட், யு.யு.லலித், ரஞ்சன் கோகோய் ஆகியோா் ஆதரவு தெரிவித்துள்ளனா்.

ஜூலை 11-இல் ஆஜா்: இந்த மசோதா தொடா்பாக கலந்துரையாட டி.ஒய்.சந்திரசூட், மற்றொரு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹா் ஆகியோா் கூட்டுக் குழு முன்பாக ஜூலை 11-ஆம் தேதி ஆஜராகவுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி பேசியவா் மீது தாக்குதல்! பாஜக கண்டனம்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்த... மேலும் பார்க்க

ரஷிய, சீன நிதியமைச்சா்களுடன் நிா்மலா சீதாராமன் சந்திப்பு: பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் நிதியமைச்சா்களை இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா். பரஸ்பர நலன்கள் மற்றும் ஒத்துழைப்பு தொடா்பாக அவா் ஆலோசனை... மேலும் பார்க்க