ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
மத்திய அரசைக் கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்
சாத்தூரில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகரச் செயலா் டி.எஸ். ஐயப்பன், சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஜோதி நிவாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
கட்சியின் நிா்வாகிகள் சாத்தூா் சந்தை, கடை வீதிகள், வடக்கு ரத வீதி, முக்குராந்தல் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில் சாத்தூா் நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.