செய்திகள் :

``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'' - திருமா விளக்கம்

post image

கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த 'மாணவர் பாராளுமன்றம்' என்னும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் விசிக தலைவர் திருமாவளவன். இதில் 'LGBTQ+' குறித்து மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த திருமா, " இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதல் இயற்கைக்கு எதிரானது" என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இது சமூகவலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலியல் மற்றும் பாலின சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த குழுக்கள் மற்றும் தனிநபர் கூட்டமைப்புகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி பேசிவிட்டதாகக் கூறி அதற்காகப் பெரிதும் வருந்துவதாக விளக்கமளித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

LGBTQ+

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் திருமா வெளியிட்டிருக்கும் பதிவில், "கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த 'மாணவர் பாராளுமன்றம்' என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன்.

அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு. எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.

எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார் திருமா.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் க... மேலும் பார்க்க

காவல்துறை தாக்குதலில் பலியான அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி; என்ன நடந்தது?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: ரயில் பெட்டிகளில் தங்கும் அறை வசதி... புது அனுபவத்தை அறிமுகப்படுத்தும் ரயில்வே துறை!

புதிய பாம்பன் பாலம்புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவை தவிர வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா... மேலும் பார்க்க

MAHER UNIVERSITY: மெஹர் பல்கலை வேந்தர் இல்லத் திருமண விழா!

சென்னை, மீனாட்சி மற்றும் ஸ்ரீமுத்துக்குமரன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த திரு.A.N ராதாகிருஷ்ணன் - திருமதி. கோமதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பேரனும், திருமதி. ஜெயந்தி ராதாகிருஷ்ணன் திரு. பிரபாகர் எ... மேலும் பார்க்க

Tantea:‌ `உடலை உரமாக்கி உழைக்கும் எங்கள் சாவுக்கு டிராக்டரை அனுப்புகிறது அரசு'- தொழிலாளர்கள் குமுறல்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலை, காஃபி பயிர்களுக்கான பெருந்தோட்டங்கள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டன. காடு, மலைகளை‌ அழித்து தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டின் ... மேலும் பார்க்க