மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலி...
டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!
டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது.
இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இக்கும்பல் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் சேர்ந்து கொண்டு டேட்டிங் ஆப் நண்பர்களை மோசடி செய்துள்ளனர்.
டேட்டிங் ஆப் மூலம் நிஷாந்த் என்பவருக்கு திஷா(23) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து திஷாவும், நிஷாந்தும் போன் நம்பர்களை பகிர்ந்து கொண்டனர். இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்தனர். இதையடுத்து போரிவலியில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் மது ஆர்டர் செய்து குடித்தனர்.

அதோடு ஆடம்பர உணவு வகைகளையும் அப்பெண் வாங்க வைத்து சாப்பிட்டார். இருவரும் சில மணி நேரம் ரெஸ்டாரண்டில் மது, சாப்பாடு என நேரத்தை செலவிட்டனர். இறுதியில் வெயிட்டர் பில் கொண்டு வந்துப்கொடுத்தபோது அதனை பார்த்து நிஷாந்த் அதிர்ச்சியாகிவிட்டார்.
ரூ.35 ஆயிரம் அளவுக்கு வந்த பில்லை கட்டும்படி இஷாந்திடம் திஷா கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த பில்லை தன்னால் கொடுக்க முடியாது என்று நிஷாந்த் தெரிவித்தார்.
இதனால் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள் மிரட்டினர். உடனே நிஷாந்த் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்ததை தொடர்ந்து ரெஸ்டாரண்ட் நிர்வாகம் ரூ.5 ஆயிரத்தை குறைத்துக்கொள்வதாக தெரிவித்தது.
எஞ்சிய ரூ.30 ஆயிரத்தை இருவரும் பகிர்ந்து கொடுத்தனர். நிஷாந்த் பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்தார். நீண்ட நேரத்திற்கு பிறகுதான் பணம் ரெஸ்டாரண்ட் ஐ.டிக்கு அனுப்பவில்லை என்று நிஷாந்திற்கு தெரிய வந்தது. இதனால் இதில் சந்தேகம் அடைந்த நிஷாந்த் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். ஏற்கெனவே இதுபோன்ற புகார்கள் வந்திருப்பதால் நிஷாந்த் புகார் குறித்து போலீஸார் முழு அளவில் விசாரணையை தொடங்கினர்.

டேட்டிங் ஆப்பில் அறிமுகமான பெண் திஷாவை போலீஸார் வரழைத்து விசாரித்தனர். இதில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் நபர்களை ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்று மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.
சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட் நிர்வாகத்திடம் முதலிலேயே பேசி பில்லை அதிகரித்து போடும் படி கூறிவிடுகின்றனர். கூடுதலாக வரும் பணத்தை இக்கும்பல் எடுத்துக்கொள்வது தெரிய வந்தது. இம்மோசடியில் ஈடுபட்டதாக 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இம்மோசடியில் மேலும் எத்தனை பேருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளது.