செய்திகள் :

ஹைதராபாத்: உள்ளாடையில் மறைந்து ஏலக்காய் பாக்கெட்டைத் திருடிய இளைஞர்; சிக்கியது எப்படி?

post image

ஹைதராபாத் சனத்நகர் பகுதியில் செயல்பட்டு வரும் டி-மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் ஒரே நாளில் மீண்டும் கடைக்கு வந்து திருடியுள்ளார்.

டி-மார்ட் கடையில், ஓர் இளைஞர் ஏலக்காய் பாக்கெட்டுகளை திருட முயன்றுள்ளார். வழக்கம்போல் கடைக்குள் நுழைந்ததும் அந்த இளைஞர் ஒரு கூடை எடுத்துக் கொண்டு, பொருட்களை அதில் எடுத்து வைத்துள்ளார்.

டி-மார்ட் கடை
டி-மார்ட் கடை

இதில் ஏலக்காய் பாக்கெட்டுகளும் இருந்தன. பின்னர் லிப்டில் மேல்தளத்திற்குச் செல்லும் போது தனியாக இருந்த அந்த இளைஞர், கூடை வைத்திருந்த ஏலக்காய் பாக்கெட்டுகளை எடுத்து தன் உள்ளாடைகளில் மறைத்து வைக்க முயன்றார். ஆனால் லிப்டில் இருந்த சிசிடிவி கேமராவில் அவருடைய செயல்கள் முழுமையாகப் பதிவாகியிருந்தன.

கடை நிர்வாகம், ஏலக்காய் பாக்கெட்டுகளில் உள்ள எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதைக் கவனித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது அந்த இளைஞரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவர்கள் கவனித்தனர்.

சம்பவம் இதோடு முடியவில்லை. அதே இளைஞர் ஒரே நாளில் மீண்டும் கடைக்கு வந்து, இரண்டு ஏலக்காய் பாக்கெட்டுகளை எடுத்து வாஷ்ரூமில் சென்று அதேபோல் மறைக்க முயன்றிருக்கிறார்.

ஆனால் முன்னமே விழிப்புடன் இருந்த கடை ஊழியர்கள், அவர் வெளியே வந்தவுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ் தாக்கரே கட்சியினர்

மகாராஷ்டிராவில் இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி படிக்கவேண்டும் என்று ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவினர் கோரி வருகின்றனர். மும்பை மீராபயந்தர் பகுதியில் கடைக்காரர் ஒருவர் மராத்தி... மேலும் பார்க்க

ம.பி: ஒரு சுவருக்கு பெயின்ட் அடிக்க 233 வேலையாட்கள்... திகைக்க வைத்த 'அரசுப் பள்ளி' பில்!

மத்தியபிரதேசம் மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசு பணியின் செலவீன விவரங்கள் பொது மக்களை திகைக்க வைத்துள்ளது. சகண்டி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் உள்ள ஒரு சுவரில் 4 லிட்டர் பெயி... மேலும் பார்க்க

Gurdeep Kaur: இந்தோரின் ஹெலன் கெல்லர் என்று இவர் கொண்டாடப் படுவது ஏன்? இவர் செய்த சாதனை என்ன?

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை ப... மேலும் பார்க்க

AI உதவியுடன் 18 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பெண் - எப்படி சாத்தியமாகியது?

18 ஆண்டுகளாக குழந்தை பெற முயன்ற அமெரிக்க தம்பதி, செயற்கை நுண்ணறிவால் (AI) கர்ப்பம் அடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் IVF சிகிச்சை மேற்கொண்டபோதிலும், முயற்சிகள் தோல்வியடைந்திருக்கிறது. காரண... மேலும் பார்க்க

தாய்லாந்து: நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய குடும்பம் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டையர்களுக்கு திருமணம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) நான்கு வயது இரட்டையர்களு... மேலும் பார்க்க

Nipah virus: கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ் - சுகாதார அமைச்சர் சொல்வதென்ன?

கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகின்றது என்பதால் மக்கள் மத்தியில் புதிய அச்சம் உருவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் கடுமையான மூளைக்காய்ச்சல் (AES) நோயால் பாதிக்கப்பட்டு உயிரி... மேலும் பார்க்க