செய்திகள் :

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

post image

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். பின்னர், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரில் அரியலூர் நோக்கி சென்றுள்ளார். அப்படி, அவர் செல்லும் வழியில் கரூர் - மாயனூர் இடையே இருந்த ஒரு உணவகத்தில் காரை நிறுத்த சொல்லி, அமைச்சர் சிவசங்கர் அந்த கடையில் டீ குடித்துள்ளார். அப்போது, அந்த உணவகத்தில் அரசு பேருந்து ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பயோ பிரேக் மற்றும் உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்தின் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்துள்ளார். 'உரிய இடத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்?. உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது?' என்று கேட்டு இருக்கிறார். சிவசங்கர் வழக்கமாக அணியும் வெள்ளை சட்டை, வேஷ்டி என இல்லாமல் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவரும், கண்டக்டரும், 'நீங்க யார்?. நீங்க ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க?. உங்களுக்கு நாங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும்?. உங்க வேலையை பாருங்க' என்ற தொனியில் இருவரும் சொல்லி, அமைச்சரை அதிர வைத்தனர். உடனே அமைச்சர் சிவசங்கர், 'நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?' எனக் கேட்டுள்ளார். அவரை நன்றாக உற்றுப் பார்த்த அவர்கள், அதன் பின்னரும், `நீங்க யாருன்னு தெரியவில்லையே?' என பதிலளித்துள்ளனர்.

sivasangar inspection

அதற்கு அமைச்சர் சிவசங்கர், ``நான் வேறு யாரும் இல்லை. உங்கள் போக்குவரத்து துறை அமைச்சர் தான். அரசு பேருந்துகளில் பயணிக்கும்போது அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்கும் கடைகளில் பேருந்தை ஏன் நிறுத்துகிறீர்கள் என்று பயணிகள் கேட்டால், அரசிடம் கேட்க சொல்கிறீர்களாம். உங்கள் இஷ்டத்திற்கு வண்டியை நிறுத்திவிட்டு, ஏதேனும் பிரச்னை வந்தால் அரசிடம் கேட்க சொல்கிறீர்கள். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், உங்களது தனிப்பட்ட லாபத்திற்காக அரசு அங்கீகாரம் பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தி பயணிகளை அதிக விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவது சரிதானா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் போக்குவரத்து ஊழியர்களிடம் அவர்கள் எந்த டிப்போவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கேட்டறிந்ததுடன், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க, வண்டியை எடுத்துச் செல்லும்படி கூறிவிட்டுச் சென்றார். அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் பேசமுடியாமல் நின்ற போக்குவரத்து ஊழியர்கள், அவருடைய அறிவுரையை ஏற்று பேருந்துகளை எடுத்துச் சென்றனர். அமைச்சர் இரவு வேளையில் மேற்கொண்ட இந்த திடீர் ஆய்வு, அரசு போக்குவரத்து துறை ஊழியர்களிடையே 'பரபர' பேசுபொருளாக மாறியிருக்கிறது.

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.செல்வப்பெருந்தகைமூலவர... மேலும் பார்க்க