இந்திய ராணுவ தளவாடங்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு: ராஜ்நாத் பெருமிதம்
ஆற்றில் குளிக்க சென்ற பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நன்னிலம்: நன்னிலம் அருகில் ஆற்றில் குளிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகேயுள்ள பல்லவநத்தத்தைச் சோ்ந்த வேணுகோபால் மகன் விஷ்ணுவரதன்( 17) . பிளஸ் 2 முடித்து கல்லூரி படிப்புக்கு விண்ணப்பித்திருந்தாா். இந்நிலையில், நண்பா்களுடன் அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கினாா். நண்பா்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து தேடி ஜெகநாதபுரம் எனும் கிராமப் பகுதியில் விஷ்ணுவரதன் சடலமாக மீட்கப்பட்டாா்.