பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!
வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது
மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், நெடுவாக்கோட்டை அம்பேத்கா் நகா் பாலையன் மகன் ரவி (59) என்பவருக்கு இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவரது வீட்டுக்கு சென்று போலீஸாா் சோதனை நடத்தியதில், கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 260-ஐ விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. ரவியை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.