செய்திகள் :

ராணுவம்: வானில் அச்சுறுத்தும் சீனாவின் 'செயற்கைகோள் படை' - எப்படி எதிர்கொள்ளும் இந்தியா?

post image

Lசீனாவின் விண்வெளி ராணுவத் தொழில்நுட்பம் உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

ஆர்பிட்டில் ஆதிக்கம் செலுத்தும் ராணுவ செயற்கை கோள்களை எதிர்கொள்வது இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும்.

தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், உளவு பார்ப்பது, கண்காணிப்பது போன்றவற்றுக்கு செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உறுதியான விண்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தேவை என இந்திய ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

"விண்வெளியே இறுதியான களம். நாம் இப்போதே அதனைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஆபத்துகாலத்தில் கையறு நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது" என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் தெரிவித்திருந்தார்.

ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்
ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்

ரூ.26,968 கோடி செலவில் விண்வெளி பாதுகாப்பு திட்டம்

இந்தியாவும் விண்வெளி சார்ந்த பாதுகாப்பு கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி வருகிறது. நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ தாக்குதலில் செயற்கைக்கோள் வழியான உடனுக்குடனான ராணுவ உளவு தகவல்களை இந்தியா உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக 2029 ஆம் ஆண்டுக்குள் 52 பிரத்யேக ராணுவ பாதுகாப்பு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.26,968 கோடி செலவில் இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பு திட்டத்தின் (space-based surveillance - SBS) 3வது கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக வரும் 2026, ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.

2023ம் ஆண்டு விண்வெளி பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டாலும், பழைய செயற்கைகோள்களை நம்பியிருப்பதும், வெளிநாட்டு வணிக ரீதியிலான நிறுவனங்களை நம்பியிருப்பதும் செயல்முறையைத் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் இந்தியா தானே SBS மூன்றாம் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய செயற்கைக் கோள்களை செயல்படுத்த முன்வந்துள்ளது.

52 செயற்கைகோள்களில் இஸ்ரோ 21 உருவாக்கும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் அனந்த் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்கள் மீதமுள்ள 31 செயற்கைக்கோள்களை உருவாக்கும்.

Indian Army
Operation Sindoor

இந்த செயற்கைகோள்கள் ஏஐ உதவியுடன் உடனுக்குடன் காலநிலை தளவல்களை வழங்கும். பகலிலும் இரவிலும் தடையின்றி முக்கிய இடங்களையும் எல்லைகளையும் பெருங்கடல்களையும் கண்காணிக்கும்.

ஆர்பிட்டில் அதிகரிக்கும் செயற்கைகோள்களால் விண்வெளிக்குப்பைகள் பெருகுவதற்கு மத்தியில் இந்தியா இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சீனாவின் செயல்பாடுகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

சீனாவின் விண்வெளி ராணுவம்!

2010ம் ஆண்டு சீனா 26 செயற்கைகோள்களை மட்டுமே செலுத்தியிருந்தது. 2024க்குள் அந்த எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துவிட்டது.

இவற்றில் 500 செயற்கைகோள்கள் உளவுபார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் அறிக்கை தெரிவிக்கிறது.

2024ம் ஆண்டு மட்டுமே சீனா 260 செயற்கைகோள்களை செலுத்தியுள்ளது. இவற்றில் 67 உளவு செயற்கைகோள்கள் அடக்கம்.

விண்வெளி ராணுவ செயற்கைகோள்களை அமைப்பதில் சீனாவின் வேகம் திகைப்பூட்டுவதாக கூறியுள்ளார் அமெரிக்க விமானப்படை ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங்.

Satelite

சீனா மற்ற நாடுகளின் செயற்கைகோள்களை அழிக்கும் கொலை வலையை விண்வெளியில் உருவாக்கியிருப்பதாக அவர் விமர்சித்தார்.

சீனாவின் செயற்கைக்கோள்களில் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைகள், மின்னணு ஜாமிங் கருவிகள் மற்றும் லேசர் ஆயுதங்கள் இருக்கின்றன. பாகிஸ்தானுடனான இந்தியாவின் மோதலின்போது சீனாவின் செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட தரவுகள் பாகிஸ்தானுக்கு பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2026 நிதியாண்டிற்கான இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் ₹6.81 லட்சம் கோடியாக உள்ளது. ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு, செயற்கைக்கோள் ஏவுதல்கள் மற்றும் விண்வெளி உளவு அமைப்பை மேம்படுத்துவதற்கு நிதியளிக்க ₹50,000 கோடி கூடுதலாக அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்களும் கூறப்படுகின்றன.

இதேவேளையில் சீனாவின் ராணுவ பட்ஜெட் ரூபாய் மதிப்பில், 20 லட்சம் கோடிக்கும் அதிகம். ஒட்டுமொத்த ராணுவ செலவீனம் 30 லட்சம் கோடியாக இருக்கலாம் என அமெரிக்கா கணிக்கிறது.

சீனா கொடுக்கும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047ம் ஆண்டுக்குள் 5 மடங்கு உயரலாம் எனக் கூறப்படுகிறது.

'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு தரப்பு விளக்கம்

ராய்ட்டர்ஸ் (Reuters) என்னும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எக்ஸ் தளத்தில், 'சட்டப்பூர்வமான கோரிக்கைக்கு ஏற்ப இந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது' எ... மேலும் பார்க்க

இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம் - பின்னணி?

முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், இன்னமும் அவருக்கு ஒதுக்கப்பட்ட 8-வது வகை பங்களாவில் இருந்து காலி செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் ... மேலும் பார்க்க

குழந்தை பெறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை - ரஷ்யா புதிய திட்டம்!

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இதை அதிகரிக்க ரஷ்யாவின் சில பகுதிகளில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன் படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் பள்ளி மாணவிகளுக்கு 1 லட்சம் ரூபிள... மேலும் பார்க்க

'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் புதிதாக 21 பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாக குழு பட்டியலை வெளியிட்டிருக்கிறார். ஆனால், அந்தப் பட்டியலில், அன்புமணியின் பெயர் இடம்பெறவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவ... மேலும் பார்க்க

"முதல்வராக ஸ்டாலின் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம், அதே நேரம்..."- பீட்டர் அல்போன்ஸ் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

Reuters: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

Reuters - இது பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் இந்தியாவின் எக்ஸ் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது, 'சட்டப்பூர்வமான கோரிக்கை' என்கிற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. ஆனால்... மேலும் பார்க்க