கேமரா பொருந்திய ‘ஸ்மாா்ட்’ கண்ணாடியுடன் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் நுழைந்த பக்தா...
அரசுப் பள்ளியில் கணித மன்றம் தொடக்க விழா
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித மன்ற தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு.ச . பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில், பட்டதாரி ஆசிரியா் பா. ரகு வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி கணிதத் துறை உதவி பேராசிரியா் டி. வைதேகி பங்கேற்று கணித மன்றத்தை தொடக்கிவைத்தாா். பேச்சு, கட்டுரை, விநாடி-வினா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதுகலை ஆசிரியா் மு. ராஜசேகரன் நன்றி கூறினாா். பட்டதாரி ஆசிரியா் வீ. வடிவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.