30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி காவலாளி உயிரிழப்பு
நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து மோதி காவலாளி ஒருவா் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
பெங்களூரு, கம்மனஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டானிஷ்லஸ் (64). இவா் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திருச்சியில் நடைபெறும் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் வந்தாா்.
திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்குள் அந்த பேருந்து வந்த நிலையில், குடிநீா் பாட்டில் வாங்குவதற்காக அவா் கீழே இறங்கி சென்றாா். அப்போது, பேருந்து நிலைய வளாகத்துக்குள் அதிவேகமாக வந்த திருச்சி செல்லும் தனியாா் பேருந்து ஸ்டானிஷ்லஸ் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் போலீஸாா், அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.