செய்திகள் :

Yash Dayal: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினாரா யஷ் தயாள்? BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

post image

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.

போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் ஆன்லைன் குறைதீர்க்கும் போர்ட்டலில் புகாரளித்த அந்தப் பெண், தாங்கள் இருவரும் 5 வருடம் ரிலேஷன்ப்பில் இருந்ததாகவும், குடும்பத்தினரிடம் மருமகள் அறிமுகம் செய்து வைத்ததால் அவரை முழுமையாக நம்பியதாகப் புகாரில் குறிப்பிட்டு, திருமணம் செய்வதாகக் கூறி மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

யஷ் தயாள்
யஷ் தயாள்

இதற்கான ஆதாரங்களாக தங்கள் இருவரின் மெசேஜ்கள், ஸ்கிரீன்ஷாட்கள், வீடியோ கால் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அப்பெண் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின்படி பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், யஷ் தயாள் கணவர் போல நடந்துகொண்டதால் அப்பெண் அவரை முழுமையாக நம்பியதாக, பின்னர் அப்பெண்ணை அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டியதாகவும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

யஷ் தயாள்
யஷ் தயாள்

இருப்பினும், யஷ் தயாளோ அல்லது அவரது குடும்பத்தினரோ யாரும் இந்த விவகாரத்தில் ஒரு அறிக்கைகூட விடவில்லை.

இந்த நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 69 (திருமணத்தில் பேரில் ஏமாற்றுதல்)-ன் கீழ் யஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபர் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ENG vs IND: ``ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் வந்தால் நிச்சயம்..'' - இந்திய பேட்டிங் கோச் ஓபன் டாக்

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 300-க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை சமன் செய்திருக்கிறத... மேலும் பார்க்க

`விடாத சோகங்கள்; தோனியின் இளம்படை இன்ஸ்பிரேஷன்; கண்டெடுத்த RCB' - ஆகாஷ் தீப்-உம் ஆட்ட நாயகன் தான்!

ஆகாஷ் தீப்... இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியி... மேலும் பார்க்க

"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது பற்றி வியான் முல்டர்

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் கேஷவ் மஹாராஜ் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாச... மேலும் பார்க்க

367 நாட் அவுட்... வாய்ப்பிருந்தும் லாரா சாதனையை முறியடிக்காமல் விட்ட தன்னலமற்ற தென்னாப்பிரிக்க வீரர்

இன்றைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன.2019 வரை டெஸ்டில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என யாரேனும் ஒருவர் முச்சதம் அடித்துக்கொண்டிருந்தார்.கடை... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: `19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் புது வரலாறு' - வைபவ் சூர்யவன்ஷி சாதனை

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சதமடித்து, ஐ.பி.எல்லில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், தற்போது 19 வயதுக்குப்பட்டோருக்கான போட்டியில் அதிவேகம... மேலும் பார்க்க

ENG vs IND: "அச்சமின்றி இங்கிலாந்தை நெருக்கிய இந்தியா" - கேப்டன் கில்லை வாழ்த்திய விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இளம் இந்திய அணியை மனதார வாழ்த்தியுள்ளார் விராட் கோலி. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வென்று சாதனை படைத... மேலும் பார்க்க