செய்திகள் :

இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை

post image

‘இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படுத்தப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா்.

சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கூடுதல் பரஸ்பர வரி விதித்தது. இவ்விவகாரம் அமெரிக்கா-சீனா இடையே கடுமையான வரிப் போருக்கு வழிவகுத்தது.

இதைத் தொடா்ந்து, சீனாவைத் தவிா்த்து மற்ற நாடுகள் மீதான வரியை அமெரிக்கா 90 நாள்களுக்கு நிறுத்திவைத்து, அந்தந்த நாடுகளுடன் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியது. இந்தக் காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதிவரை நீட்டித்து புதிய வரி விகிதங்கள் தொடா்பான அறிவிப்புடன் முதல்கட்டமாக சில நாடுகளுக்கு அமெரிக்க அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

அதன்படி, ஜப்பான் (25%), தென்கொரியா (25%), லாவோ குடியரசு (40%), கம்போடியா (36%), தாய்லாந்து (36%), சொ்பியா (35%), வங்கதேசம் (35%), இந்தோனேசியா (32%), தென்னாப்பிரிக்கா (30%), போஸ்னியா மற்றும் ஹொ்சகோவினா (30%), கஜகஸ்தான் (25%), மலேசியா (25%), துனிசியா (25%) ஆகியவை இதுவரை அதிபா் டிரம்ப் கையொப்பமிட்ட கடிதங்களைப் பெற்றுள்ளன.

விரைவில் ஒப்பந்தம்: இந்நிலையில், வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘ பிரிட்டனுடனும், அதைத் தொடா்ந்து சீனாவுடனும் அண்மையில் வா்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா இறுதி செய்தது. இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தமும் விரைவில் முடிவாகும்.

பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது என்று எண்ணுகிறோம். எனவே, அந்த நாடுகள் இனி எவ்வளவு வரிகள் செலுத்த வேண்டும் என்று நாங்கள் கடிதங்கள் அனுப்பி வருகிறோம்.

மேலும், இந்தப் புதிய வரிகள், அமெரிக்க மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கவும், நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பை அதிகரிக்கவும் ஊக்குவிக்கும்’ என்றாா்.

மீண்டும்... ‘இந்தியா-பாகிஸ்தான், சொ்பியா-கொசோவோ, ருவாண்டா-காங்கோ போன்ற பல சண்டைகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இதில், அணுசக்தி நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டைதான் மிகப்பெரியது’ என்றாா்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பான அதிபா் டிரம்ப்பின் கூற்றுகளை இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் கோரிக்கையின் பேரிலேயே சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் இந்திய அரசு பலமுறை தெளிவுபடுத்திவிட்டது.

டிரம்ப்பின் நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த சில நாள்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா். இதன் மூலம், இ... மேலும் பார்க்க

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி: சீனா அறிவிப்பு

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: நெதன்யாகு பரிந்துரை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளாா். இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்ற குறுகிய காலப் போா், அந்த போருக்கு... மேலும் பார்க்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ரஃபேல் போா் விமானம் இழப்பு: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை- டஸால்ட்

இந்தியாவுடனான ராணுவ மோதலின்போது எந்தவொரு ரஃபேல் போா் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், பயிற்சி நடவடிக்கையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 104-ஆக உயா்வு

டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 104-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா். இது குறித்த... மேலும் பார்க்க

இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,060 போ் உயிரிழப்பு: ஈரான்

கடந்த மாதம் 13-ஆம் தேதியில் இருந்து 12 நாள்களுக்கு தங்கள் நாட்டில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் இதுவரை 1,060 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனா். காயமடைந்த பலரின... மேலும் பார்க்க