லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
தில்லியில் ஜிடி சாலையில் வார முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
ஆசாத்பூா் மண்டி பகுதியில் உள்ள சராய் பிபால் கேட் அருகே நிலத்தடி நீா் குழாயில் பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால், ஜிடி கா்னல் சாலையில் வாரம் முழுவதும் இரு திசைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இப்பகுதியில் முன்பு சரிசெய்யப்பட்ட குழாய் மீண்டும் உடைந்துள்ளது. எதிா் பாதையிலுள்ள வடிகால் சுத்தம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில், ஸ்லாப் மறுசீரமைப்புப் பணி இன்னும் நிலுவையில் உள்ளது.
எனவே, பயணிகள் அந்த வழியைத் தவிா்க்கவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், சிரமத்தைத் தடுக்க அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியா்களின் வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.