செய்திகள் :

ஜானகி எனும் பெயரால் வெடித்த சர்ச்சை..! சுரேஷ் கோபி படத்துக்கு தீர்வு!

post image

ஜானகி எனப் பெயரிடப்பட்டதால், தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, சர்ச்சையை உருவாக்கிய மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகரும், மத்திய சுற்றுலாத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரின் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்துக்கு, “ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” எனப் பெயரிடப்பட்டிருந்தது.

இதில், ஜானகி என்பது சீதையின் மறுப்பெயர் எனக் கூறி அப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தீர்வுக்காண அந்தத் திரைப்படத்தின் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த 2 வாரங்களில் 4 முறை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அந்தப் படத்தின் பெயரை மாற்றுவதாகப் படக்குழுவினர் இன்று (ஜூலை 9) தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் பெயரானது ”ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா” என மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் மொத்தம் 96 இடங்களில் காட்சி மாற்றம் (கட்ஸ்) செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது அது வெறும் 2 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், படக்குழு மற்றும் தணிக்கை வாரியம் ஆகிய இருதரப்பும் ஒப்புக்கொண்டதால், அதன் சர்ச்சைகள் முடிவுக்கொண்டு வரப்பட்டு, அடுத்த 24 மணிநேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட படம் தணிக்கை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அதன் இயக்குநர் பிரவீன் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின், ஒடிடி உரிமங்கள் ஏற்கனவே தனியார் நிறுவனத்துக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து படத்தின் நாயகனான, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Union Minister of State Suresh Gopi's new film, which was denied a censor certificate and created controversy because it was named Janaki, has reportedly been renamed.

இதையும் படிக்க: மாரீசன் - ஃபாஃபா பாடல்!

விளையாட்டுத் துளிகள்...

சா்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதல் முறையாக டாப் 10 இடத்துக்குள் முன்னேறி, 6-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா். ஊக்கமருந்து பரிசோதனையை தவிா்த்து வருவதாகக் கூறி, இந்திய மல்யுத்த... மேலும் பார்க்க

உலகத்தரமான அனிமேஷன்... மகாவதாரம் நரசிம்மா டிரைலர்!

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் பல கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயார... மேலும் பார்க்க

முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. மெட்ராஸ் படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமான கலையரசன் குறிப்பிடத்தக்க பல படங... மேலும் பார்க்க

பன் பட்டர் ஜாம் - அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல்!

பன் பட்டர் ஜாம் படத்தில் நடிகை அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்ட... மேலும் பார்க்க

கூலி இரண்டாவது பாடல் அறிவிப்பு!

கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது ப... மேலும் பார்க்க