செய்திகள் :

உலகத்தரமான அனிமேஷன்... மகாவதாரம் நரசிம்மா டிரைலர்!

post image

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் பல கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

தற்போது, மகாவதாரம் நரசிம்மா என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார்.

ஹிரண்யகசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

இந்தப் படத்தின் டிரைலர் தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் பான் இந்திய படமாக வரும் ஜூலை 25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மேலும், 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் இந்தப் படத்துடன் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஏழை திரைப்படமாக எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.

மகாவதாரம் நரசிம்மா - 2025 ரிலீஸ்

மகாவதாரம் பரசுராம் - 2027 ரிலீஸ்

மகாவதாரம் ரகுநந்தன் - 2029 ரிலீஸ்

மகாவதாரம் தாக்காதேஷ் - 2031 ரிலீஸ்

மகாவதாரம் கோகுலானந்தா - 2033 ரிலீஸ்

மகாவதாரம் கல்கி -1 - 2035 ரிலீஸ்

மகாவதாரம் கல்கி -2 - 2037 ரிலீஸ்

The trailer of the film Mahavatharam Narasimha, produced by Hombale Films, has been released.

விளையாட்டுத் துளிகள்...

சா்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முதல் முறையாக டாப் 10 இடத்துக்குள் முன்னேறி, 6-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா். ஊக்கமருந்து பரிசோதனையை தவிா்த்து வருவதாகக் கூறி, இந்திய மல்யுத்த... மேலும் பார்க்க

முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!

நடிகர் கலையரசன் நடித்துள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. மெட்ராஸ் படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமான கலையரசன் குறிப்பிடத்தக்க பல படங... மேலும் பார்க்க

பன் பட்டர் ஜாம் - அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல்!

பன் பட்டர் ஜாம் படத்தில் நடிகை அதிதி சங்கர் குரலில் வெளியான பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்ட... மேலும் பார்க்க

ஜானகி எனும் பெயரால் வெடித்த சர்ச்சை..! சுரேஷ் கோபி படத்துக்கு தீர்வு!

ஜானகி எனப் பெயரிடப்பட்டதால், தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டு, சர்ச்சையை உருவாக்கிய மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரபல நடிகர... மேலும் பார்க்க

கூலி இரண்டாவது பாடல் அறிவிப்பு!

கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது ப... மேலும் பார்க்க