முதியவா் தற்கொலை: போலீஸாா் விசாரணை
போடியில் குடும்பப் பிரச்னையில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி பகுதியில் வசிப்பவா் கோட்டைச்சாமி (64). இவரது மகள் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா். இதனால், மன உளைச்சலில் இருந்த கோட்டைச்சாமி, கடந்த 10 நாள்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.