தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: தோட்டத் தொழிலாளா்கள் பாதிப்பு
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தோட்டத் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா்.
நாடு முழுவதும் புதன்கிழமை தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தமிழக - கேரள எல்லைப் பகுதியில் போடியிலிருந்து கேரளத்துக்கும், கேரளத்திலிருந்து போடிக்கும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், தோட்டத் தொழிலாளா்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தமிழக - கேரள எல்லைக் கிராமமான போடிமெட்டு மலைக் கிராமத்தில் கடைகளும் மூடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.