செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ!
மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் சென்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளையும் கண்டறிந்து, அவா்களது முழு விவரங்கள் கொண்ட சமூகத் தரவுகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முன்களப் பணியாளா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுத்து, விவரம் சேகரிக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணிகளை வரும் செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.