குரூப் 4 தோ்வு முடிவு 3 மாதத்தில் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி தலைவர்
பைக் விபத்து: இருவா் காயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனா். கள்ளிப்பட்டி புறவழிச் சாலையில் சென்றபோது, இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.