விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு
தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், பணி நிமித்தமாக இவா் பெரியகுளம் அஞ்சலகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த வனராஜ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.