தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்களை விவசாயிகள் நடவுச் செய்துள்ளனா். இந்த நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு இந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களைச் சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
கூடலூரைச் சுற்றி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டி இந்த விவசாய நிலங்கள் உள்ளதால், அடிக்கடி மலையிலிருந்து காட்டு யானைகளை புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. தற்போதும், காட்டு யானைகள் புகுந்து நெல்பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. இந்தக் காட்டு யானைகளை விரட்ட வனத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்
எனவே, அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.