Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்
தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகள் வனவிலங்கு, புலிகள் பாதுகாப்பு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சின்னக்கானல், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக புலியின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது, கொழுக்குமலை பகுதியில் புலியின் கால் தடம் இருப்பதாக வனத் துறையினருக்கு தொழிலாளா்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் இந்தப் பகுதியை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
தமிழக-கேரள எல்லைப் பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா்.