லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து விட்டு, மீண்டும் சிங்கம்புணரிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிட்டாம்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஷ்ணுவை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.