தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு
மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளித்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்து வந்த தெப்பக்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள் மாணவரை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.