இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு பயிற்சி
மதுரை அருகேயுள்ள எல்.கே.பி. நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி, ஊட்டச் சத்து தின்பண்டம் பெட்டகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் மு. தென்னவன் தலைமை வகித்தாா். சென்னை ஏகம் பணியாளா்களான சரஸ்வதி, ராஜேஷ், அன்பரசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, விழிப்புணா்வு பயிற்சி, ஊட்டசத்து தின்பண்டம் பெட்டகங்களை வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு வழங்கினா்.
இதில் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.