Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு
சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.
அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.
இந்த நிலையில், திபெத்தியன் ஆக்ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'திபெத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சீனா ஆக்கிரமிப்புப் பகுதியில் இருக்கும் சீனா நடத்தும் போர்டிங் பள்ளியில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் குழந்தைகள் 4 - 6 வயதைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
அடுத்த தலாய் லாமா யார் என்பதில் தற்போதைய தலாய் லாமா தலையிடுவதைத் தடுக்க சீன அரசு நினைக்கிறது.
அதே சமயம், திபெத்தியன் குழந்தைகள் மத்தியில் அவர்களது கலாசாரத்தை அழிக்க நினைக்கிறது
சீனப் பள்ளியில் படிக்கும் திபெத்தியக் குழந்தைகள் தங்களது தாய் மொழி பேச அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்குச் சீன மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அவர்கள் அதைக் கற்றுக்கொள்ளவும், பேசவும் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
மேலும், அவர்களுக்கு சீனா அரசு அங்கீகரித்த வரலாறு மட்டுமே கற்றுக்கொடுக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.