டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த மோனிகா பாடல்..! தொடரும் பூஜா ஹெக்டேவின் ஆதிக்கம்!
நடிகை பூஜா ஹெக்டே நடனத்தில் வெளியான கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தங்கக் கடத்தலை முதன்மைக் கதையாக வைத்து இப்படம் முழுநீள ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூலி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 27 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
அனிருத் இசையமைப்பில் விஷ்ணு எடவன் எழுதிய இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் நேற்று மாலை வெளியானது.
இந்நிலையில், இந்தப் பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும், இந்தப் பாடல் 5 மில்லியன் (50 லட்சம்) பார்வைகளையும் தாண்டியுள்ளது.
இதில், நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்து வருகிறது.
ஏற்கெனவே, அரபிக் குத்து பாடல், கனிமா பாடல்கள் பூஜா ஹெக்டேவின் நடனத்தினால் ரசிகர்களிடையே புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.