செய்திகள் :

Sanjay Dutt: "என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!" - சஞ்சய் தத் கலகல!

post image

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'.

'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

KD - The Devil
KD - The Devil

பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய சஞ்சய் தத், "எனக்கு கமல் சார் மீதும், ரஜினி சார் மீதும் மரியாதை உள்ளது. அவர்கள் என்னுடைய சீனியர்கள். அவர்களிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன்.

நான் ரஜினி சாருடன் இந்தி படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பணிவானவர் ரஜினி சார். நான் விஜய்யுடனும் இணைந்து நடித்திருக்கிறேன்.

Sanjay Dutt
Sanjay Dutt

நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். (சிரித்துக்கொண்டே...) அவர் எனக்கு 'லியோ' படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை.

அவர் என்னை வீணடித்துவிட்டார். எனக்கு அஜித் சாரையும் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பரும்கூட.

ரஜினி சாரின் பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போது 'கூலி' படத்திற்காக நான் காத்திருக்கிறேன்." என்றார்.

Thalaivan Thalaivi: "கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் உழவு மாடு ஓட்டுற மாதிரி..." - விஜய் சேதுபதி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் இம்மாதம் 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி என நட்சத்திரப் பட்டாளங்... மேலும் பார்க்க

Shruti Haasan: "மக்கள் அப்படி நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல!" - ரஜினி குறித்து ஷ்ருதி ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. படத்தில் ர... மேலும் பார்க்க

Shilpa Shetty: "விஜய் சாருடன் நடனம்; வடிவேலு சார் கற்றுக் கொடுத்த தமிழ்!" - நடிகை ஷில்பா ஷெட்டி

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'. 'ஜனநாயகன்' படத்தை தயாரிக்கும் கே.வி. என் தயாரிப்பு நிறுவனம்தான... மேலும் பார்க்க

Oho Enthan Baby Review: இளமை துள்ளும் காதல் கதையின் ஓப்பனிங்கலாம் நல்லாயிருக்கு... ஆனா ஃபினிஷிங்?

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகள், அதனால் வீட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சினிமாவை தோழனாக மாற்றிக்கொள்கிறான் அஷ்வின் (ருத்ரா). வளர்ந்த பின் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற... மேலும் பார்க்க